Vinayagar Chathurthi: 32 வடிவங்களில் அருளும் விநாயகரைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?

32 பெயர்கள் மற்றும் உருவத்தில் அருளும் கணபதியின் பெயர்கள் என்னென்ன என்றும், ஒவ்வொரு கணபதிக்கும் என்ன வித்தியசம், எப்படி இருப்பார் என்பதை விரிவாக பார்ப்போம்...


இந்து மதத்தில் எந்த ஒரு சுப நிகழ்ச்சியையும் தொடங்குவதற்கு முன்னர் விநாயகரை வணங்கி தொடங்குவது வழக்கம். எளியோருக்கு எளிமையாக காட்சி தரக்கூடிய விநாயகர் நாம் தெருவோரமும் சரி, கோயிலின் முகப்பிலும் சரி அவர் தவிர்க்க முடியாத, தவிர்க்கக் கூடாத முழுமுதல் கடவுளாக இருக்கிறார்.


கபிலதேவநாயனார் என்பவர் கணபதி குறித்து,

“ விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்.
விநாயகனே வேட்கை தணிவிப்பான்.
விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாந்
தன்மையினால் கண்ணிற் பணிமின் கனிந்து ” என பாடியுள்ளார்.

32 வகை கணபதிகள்
விநாயகரின் பல்வேறு உருவங்களில், பெயர்களில் காட்சி தருவதைப் பார்த்திருப்போம். விநாயகரின் 32 உருவம் மற்றும் பெயர்கள் பற்றி இங்கு பார்ப்போம்.

இந்த 32 கணபதிகளில் முதல் 16 கணபதி 'ஷோடச கணபதி' வகைகள் என்றும், அடுத்த 16 கணபதி 'ஏக விம்சதி' வகை என பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கணப்தி குறித்து அதன் உருவக் குறித்து இங்கு பார்போம்.

1. பால கணபதி :
குழந்தை போன்ற உருவத்தில், செங்கதிர் நிறத்தில் காட்சி தரக்கூடியவர். இவர் மாம்பழம், வாழைப்பழம், பலாப்பலம், கரும்பு ஆகியவற்ற தன் நான்கு திருக்கரங்களில் தாங்கியவர்.